தமிழ்நாட்டில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இன்று கொரோனாவில் இருந்து 382 பேர் குணமடைந்து உள்ளனர்
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 321 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 174 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலம் முழுவதும் 1,870 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவில் இருந்து 382 பேர் குணமடைந்து உள்ளனர்.