170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-07 18:38 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் கிழக்குப்பகுதியில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 170 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்ததுடன், கடத்திக் கொண்டு வந்த லாரியும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடோனின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் (வயது 60), அவரது மகன் ஹரி பாலகிருஷ்ணன் (30) ஆகிய 2 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்