தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகைகள் கொள்ளை

தொழிலாளி வீட்டில் 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.;

Update: 2022-08-18 18:45 GMT

திருச்சி உறையூர் காந்திபுரம் குயிலுக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் அன்பரசன். இவர் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவரும் வீட்டு வேலைக்கு செல்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து அன்பரசன் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்