ஓடையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் இடித்து அகற்றம்
சிங்காநல்லூரில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 17 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.;
சிங்காநல்லூரில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 17 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.
ஓடை ஆக்கிரமிப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை யில் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே குட்டிநாயர் லே-அவுட் வழியாக செல்லும் நீலிக்கோ ணம்பாளையம் ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் சென்றது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், அந்த ஓடைைய ஆக்கிரமித்து கழிவறை, வீடுகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
17 வீடுகள் அகற்றம்
உடனே அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை.
இதைய டுத்து மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர்.
அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஓடைைய ஆக்கிரமித்து கட்டி இருந்த கழிவறை மற்றும் வீட்டின் சுற்றுச்சுவர் உள்பட 17 வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நீலிக்கோ ணாம்பாளையம் ஓடை 15 அடி அகலம் கொண்டது. அதை ஆக் கிரமித்து பல இடங்களில் வீடுகள் மற்றும் தென்னை உள்ளிட்ட மரங்களை நட்டு இருந்தனர்.
தற்போது அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு விட்டது. எனவே நீரோடைகளை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.