ரூ.16½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.16½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-09 19:49 GMT

கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 285 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த முகமது கனி என்பதும், உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 285 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்