தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மார்ச் மாதம் 15.32 லட்சம் பேர் சேர்ப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 15.32 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2.47 லட்சம் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதில் 9.68 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் என்றும் 5.64 லட்சம் சந்தாதாரர்கள், அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 22-25 வயது வரையிலானவர்கள்4.11 லட்சம் பேர், 29-35 வயது வரம்பில் 3.17 லட்சம் பேர், 18-21 வயது வரம்பில் 2.93 லட்சமும் சந்தாதாரர்களாக சேர்ந்துள்ளனர். மராட்டிய மாநிலம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத், அரியாணா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.