காரில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே காரில் கடத்திய 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-02-17 18:45 GMT

தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரில் 2 பேர் சில மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக போலீசார் அந்த காரில் சோதனை செய்தனர். அப்போது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக கார் மற்றும் அந்த பகுதியில் தலா 40 கிலோ எடை கொண்ட 34 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்