150 பவுன் நகை கொள்ளை போன வழக்கு விசாரணையை மாற்றத்தேவையில்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

150 பவுன் நகை கொள்ளை போன வழக்கு விசாரணையை மாற்றத்தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது;

Update: 2023-03-15 20:27 GMT


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஜெயராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எங்களது வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. எனவே அந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி தாரணி விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 31 சவரன் நகை மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த வழக்கில் நிலை அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகையை காரைக்குடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றத் தேவையில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்