சென்னை நீலாங்கரையில் ஒரே நாளில் 15 டன் குப்பைகள் அகற்றம்

குப்பைகள் அகற்றப்பட்டு நோய் பரவலை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டது.;

Update: 2023-12-13 00:55 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரை பகுதியில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து சரஸ்வதி நகர், பாண்டியன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதில் ஒரே நாளில் சுமார் 15 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நோய் பரவலை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்