ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சொந்த ஊர் திரும்பினர்.;

Update: 2022-11-29 18:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்திலிருந்து கடந்த 5-ந்தேதி 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அந்த 15 மீனவர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் படகுகளை விடுவிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனிடையே விடுதலை செய்யப்பட்ட 15 மீனவர்களும் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை வந்திறங்கிய மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனம் மூலம் நேற்று மாலை ராமேசுவரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்த மீனவர்களை ராமேசுவரம் மீன் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் மற்றும் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்டவர்களும், மீனவர்களின் குடும்பத்தினரும் வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்