திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணி ஒருவர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.