நாய் கடித்து 15 ஆடுகள் சாவு

ஓட்டப்பிடாரம் அருகே நாய் கடித்து 15 ஆடுகள் இறந்தது.

Update: 2023-05-30 19:00 GMT

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து உள்ளார்.

இந்த நிலையில் ராமகிருஷணன் வழக்கமாக நிலங்களில் கிடை போடுவது வழங்கம். அதுபோல அங்குள்ள நிலத்தில் உரத்திற்காக ஆட்டு கிடை போட்டு இருந்தார்.

நேற்று அதிகாலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை அடைத்து வைத்திருந்த கிடைக்குள் புகுந்த வெறிநாய் அங்குள்ள ஆடுகள் மற்றும் ஆட்டு குட்டிகளை கடித்து குதறியுள்ளது. இதில் 10 ஆடுகள் மற்றும் 5 ஆட்டுகுட்டிகள் என 15 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்