15 அடி உயரத்தி யோகாசனம் - கல்லூரி மாணவி சாதனை...!

விருதுநகரில் 15 அடி உயரத்தி யோகாசனம் செய்து கல்லூரி மாணவி சாதனை படைத்து உள்ளார்.;

Update: 2022-06-10 11:50 GMT


விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் அனுப்பிரியா(வயது19) தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே யோகாசனத்தில் ஆர்வம் கொண்ட மாணவி அனுப்பிரியா மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு 2-ம் இடம் பெற்றார்.

இந்நிலையில் இன்று நோபிள் உலக சாதனை பதிவுக்காக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவி அனுப்பிரியா 15 அடி உயரத்தில் 8 நிமிடங்கள் கர்ப்ப பிண்ட யோகாசனம் செய்து சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிகழ்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். மாணவியின் சாதனையை பாராட்டி அவருக்கு நோபிள் சாதனை பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்