147 பேருக்கு இருளர் இன சாதி சான்றிதழ்
147 பேருக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.;
திருப்பத்தூர் தாலூகா குரும்பேரி மதுரா இருளர் வட்டம் மற்றும் தெத்துமேடு கிராமங்களில் வசிக்கும் இந்து இருளர் இன மக்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி கலந்துகொண்டு 147 பேருக்கு இருளர் இன சாதி சான்றிதழ் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா, மாதேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.