ரூ.14½ லட்சம் மருத்துவ உபகரணங்கள்

விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.14½ லட்சம் மருத்துவ உபகரணங்கள் கலெக்டர் மோகன், லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினர்;

Update: 2022-11-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு உபகரணமான சி-ஆர்ம் என்ற சிறப்பு தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணம் தேவைப்பட்டது. இதையறிந்த விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்யேக உபகரணமான சி-ஆர்ம் என்ற சிறப்பு தொழில்நுட்பம் வாய்ந்த உபகரணத்தை ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 800 மதிப்பிலும் மற்றும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்த ஏதுவாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தையும் வழங்க ஏற்பாடு செய்தார்.

இதையொட்டி நேற்று விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரூ.14 லட்சத்து 57 ஆயிரத்து 800 மதிப்பில் மருத்துவ உபகரணம் மற்றும் குடிநீர் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, டாக்டர்கள் சாந்தி, லதா, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, நகராட்சி கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், நவநீதம் மணிகண்டன், உஷாராணி மோகன்ராஜ், கோமதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்