நெல்லை மேலப்பாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் கைது

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மதம், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-09 18:43 GMT

நெல்லை,

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மதம், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலப்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக பாளையங்கோட்டை மத்திய சிறையை நோக்கி புறப்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் திடீரென்று போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றி மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பெண்கள் உள்பட 130-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்