13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-23 19:25 GMT

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மாந்தங்குடி காட்டுபட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி காட்டுபட்டி பகுதியில் ஒரு குடோனில் சுமார் 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சுமார் 2,500 கிலோ பச்சரிசி, சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்பு அரிசி, சுமார் 700 கிலோ உடைக்கப்பட்ட குருணை அரிசி ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் சுமார் 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை சேகரிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்