ரூ.13 ஆயிரத்து 286 கோடிக்கு கடன் வழங்க இலக்கு
ரூ.13 ஆயிரத்து 286 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில் ஊரக மற்றும் வேளாண் மேம்பாட்டு பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி திருச்சி மாவட்டத்தில் வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம், 2023-2024-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த திட்ட அறிக்கையை தயார் செய்தது. அதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் ரூ.13 ஆயிரத்து 286.57 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்ட அறிக்கையை திருச்சி மாவட்ட கலெக்டர்பிரதீப்குமார் வெளியிட்டு பேசும் போது, விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை இந்த திட்டம் விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெறுக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும் என்றார். நிகழ்ச்சியில், வங்கியாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.