13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 ஆயிரத்து 53 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-01-05 18:46 GMT

13 லட்சம் வாக்காளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பட்டியலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி பெற்றுக் கொண்டார். அதன்பின் கலெக்டர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில், 6 லட்சத்து 62 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 79 ஆயிரத்து 306 பெண் வாக்காளர்களும், 66 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 பேர் இடம்பெற்றுள்ளனர்.

2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் கடந்த 9.11.2022 முதல் 8.12.2022 வரை நடைபெற்ற 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது 11 ஆயிரத்து 465 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 25 ஆயிரத்து 4 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

23 ஆயிரத்து 53 வாக்காளர்கள் நீக்கம்

2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 9 ஆயிரத்து 934 ஆண் வாக்காளர்கள், 13 ஆயிரத்து 111 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 23 ஆயிரத்து 53 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-ன்போது 18,869 இளம் வாக்காளர்கள் (18-19 வயதுடையவர்கள்) வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1559 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்