நெல்லைக்கு 1,271 டன் ரேஷன் அரிசி வந்தது

நெல்லைக்கு ரெயில் மூலம் 1,271 டன் ரேஷன் அரிசி வந்தது.;

Update: 2022-07-28 20:11 GMT

நெல்லை மாவட்டத்திற்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்ய அவ்வப்போது ரெயில்கள் மூலம் வடமாநிலங்களில் இருந்து அரிசி மூட்டைகள் கொண்டு வரப்படும். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 1,271 டன் ரேஷன் அரிசி ெரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

20 சரக்கு பெட்டிகளில் வந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்