ரூ.120 கோடியில் நடைபெறும் 4 வழி சாலை விரிவாக்க பணி
தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடியில் நடைபெறும் 4 வழி சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.;
தண்டராம்பட்டு
திருவண்ணாமலையில் இருந்து அரூர் வரை தண்டராம்பட்டு, தானிப்பாடி வழியாக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பக்க கால்வாய், மேம்பாலம், நீர்வரத்து கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்.எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், கோவிந்தன்,
ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன், உதவி பொறியாளர்கள் சசிகுமார், பிரீத்தி, தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.பி.ஆர். ரமேஷ் மற்றும் அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.