விஷ வண்டுகள் கடித்து 12 பெண்கள் காயம்

திருமயம் அருகே விஷ வண்டுகள் கடித்து 12 பெண்கள் காயம் அடைந்தனர்.;

Update: 2022-11-25 19:57 GMT

திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ராங்கியம் கண்மாய் கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதர் செடிக்குள் இருந்த விஷ வண்டுகள் பெண்களை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 12 பெண்கள் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்