ஒரே நேரத்தில் 12 கோவில்களில் வெள்ளி நகைகள்- பணம் கொள்ளை

கூத்தாநல்லூர் பகுதியில் ஒரே நேரத்தில் 12 கோவில்களில் வெள்ளி நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-09-25 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் ஒரே நேரத்தில் 12 கோவில்களில் வெள்ளி நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 கோவில்களில் கொள்ளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோரையாறு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கதவை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் அம்மன் தலைகவசம் ஆகிய வெள்ளி நகைளை கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கீழப்பாலம், தென்பாதி, சித்தாம்பூர், விழல்கோட்டகம் உள்ளிட்ட12 கோவில்களில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூத்தாநல்லூர் பகுதியில ஒரே நேரததில் 12 கோவில்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்