பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது
கரூர், குளித்தலையில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.;
7 பேர் கைது
கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அமராவதி ஆற்று பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அமராவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பெண்கள் பள்ளி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் (வயது 46), மகாலிங்கம் (58), விஸ்வநாதன் (75), முருகன் (53), ராஜேந்திரன் (63), சக்திவேல் (46), ஆறுமுகம் (52) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.10 ஆயிரத்து 900 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றபோது அந்தப் பகுதியில் பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிக்கொண்டிருந்தகண்டியூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (வயது 40), திருப்பதி (40), சந்துரு (40), லோகநாதன் (40) மற்றும் பூபதி (53) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.200 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர், குளித்தலை பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.