அன்னூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 ேபர் கைது

அன்னூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதுதொடர்பாக 3 ேபர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-12 18:45 GMT

அன்னூர்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொகலூர் ஊராட்சிக்குட்பட்ட ேஜ.ஜே. நகரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் வந்த கேரளாவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 34), மதுரையை சேர்ந்த நல்லசாமி (30), மற்றும் கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (33) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள, அவர்கள் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் மீதும் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்