11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு
தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முதல் நடைபெறுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி முதல் நடைபெறுகின்றன. இந்த நிலையில் பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி, 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத்துறை பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இவர்களில் செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.