118-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்-தலைவர்கள் மரியாதை
சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது முழு உருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
சி.பா. ஆதித்தனார் சிலை முன்பு அவரது படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலை முரசு' நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலை மலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம், தந்தி டி.வி, சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என்.டி.வி., கோகுலம் கதிர் ஊழியர்கள் மற்றும் மாலை முரசு, மாலை முரசு டி.வி. ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
அரசு சார்பில் மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர்கள் சரவணன், அன்புசோழன், இணை இயக்குனர்கள் மேகவர்ணம், தமிழ் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் முத்தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
அரசியல் கட்சிகள்
தி.மு.க. சார்பில் கிரிராஜன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், பிரபாகர் ராஜா, நிவேதா முருகன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் எஸ்.ஆஸ்டின், சிம்லா முத்துசோழன். வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்.
அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, மாவட்ட செயலாளர் பாலகங்கா, மாநில இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர்.
முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், திருநாவுக்கரசர் எம்.பி., அசன் மவுலானா எம்.எல்.ஏ, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.தாஸ், மாநில செயலாளர் ஜி.தமிழ்செல்வன், கொட்டிவாக்கம் முருகன். விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, மகேந்திரன், கழககுமார், பகுதி செயலாளர் தென்றல் நிசார், பூங்கா நகர் ராம்தாஸ்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்.
பா.ம.க.
பா.ம.க. சார்பில் இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், வர்த்தக அணி செயலாளர் ஆர்.எஸ்.முத்து, தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்.
பா.ஜ.க. சார்பில் துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.தங்கமுத்து,
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர் சுகுமார்பாபு, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வேணுகோபால், மதுரவாயல் பகுதி தலைவர் சதீஷ்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகாலிங்கம், ஈஸ்வரன். புதிய நீதிக்கட்சி சார்பில் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், அமைப்பு செயலாளர்கள் பழனி, செல்வம். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேச்சிராஜன்.
இந்து முன்னணி
இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் மணலி மனோகர், மாநகர தலைவர் ஏ.டி. இளங்கோவன். அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமை நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், துணை பொதுச்செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஏ.கணேசா.
திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் அணியாப்பூர் ஓ.செல்வம், மன்ற அமைப்பாளர் மணலி எம்.ராஜகோபால், சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், அணியாப்பூர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், கதிரேசன்.
திருவொற்றியூர் மன்ற தலைவர் டி.முல்லை ராஜா, மணலி சேக்காடு மன்ற தலைவர் காளியப்பன், பொருளாளர் பாண்டியன், ஆர்.கே.நகர் பகுதி தலைவர் திராவிட சக்கரவர்த்தி, வட சென்னை மாவட்ட நற்பணி மன்ற தலைவர் துரைபழம், செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவர் ராமையா. அசோக்நகர் மன்ற செயலாளர் பொன்.அருணாசலபாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி.
நாடார் சங்கங்கள்
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணை செயலாளர் செல்லதுரை, செயற்குழு உறுப்பினர் கோசல்ராம், கல்விக்குழு உறுப்பினர் ஆர்.செல்வக்குமார்.
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் வேல்முருகன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சங்க இணை செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் சந்திரமோகன்.
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், துணைத்தலைவர் ஆர்.காமராஜ், செயலாளர் மாடசாமி, தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம்.
அயன்புரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் பிரபாகரன். மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை தலைவர் டி.ஏ.சண்முகம், துணை செயலாளர்கள் ரமேஷ், ஜெயபாண்டி, துணைத்தலைவர்கள் முருகன், ஜி.எஸ்.ராஜ். எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், தலைவர் சுதந்திரதாஸ். தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜி ராஜன், பொதுச்செயலாளர் எஸ்.பி.சேகர்.
மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை மகமை தருமபண்டு தலைவர் சந்திரமோகன், செயலாளர் அரிகரன், பொருளாளர் பொன்ராஜ். சென்னை வாழ் இனாம்கரிசல்குளம் நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் விஜய் முனியப்பன்.
பெரம்பூர் வட்டார நாடார்கள் சங்க தலைமை நிலைய நிர்வாகிகள் ரங்கசாமி, மாசானமுத்து, பேரின்பராஜ், பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் சோலையப்பன், கிருஷ்ணசாமி, வள்ளிநாயகம், செயற்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், சந்திரசேகர், செல்வ முனியசாமி, சிங்கராஜா, பொன்குமார், முருகேச பாண்டியன்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் ஜான்ஸ்டீபன், பொருளாளர் சின்னத்துரை. ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் லட்சுமணன், துணைத்தலைவர்கள் தங்கராஜ், கதிரேச பெருமாள். ராயபுரம் நாடார் சங்க தலைவர் எட்வர்ட் ராஜா,
சாலிகிராமம் நாடார் சங்க தலைவர் வேல்குமார், செயலாளர் சக்திவேல், பொருளாளர் தாஸ். கோடம்பாக்கம் நாடார் சங்க பொருளாளர் பாலகிருஷ்ணன்.
நெற்குன்றம் நாடார் சங்க தலைவர் முத்துராமன், மங்களாபுரம் நாடார் ஐக்கிய சங்க துணை செயலாளர்கள் செல்வம், பாலாஜி சுகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், செயலாளர் மலர்மன்னன், பொருளாளர் சிவக்குமார். சென்னை வாழ் முள்ளக்காடு நாடார்கள் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன்.
கோயம்பேடு வட்டார நாடார்சங்க தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், சென்னை வாழ் போடுபட்டி நாடார் உறவின் முறை தலைவர் சின்னா, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பால்ராஜ், துணைத்தலைவர் பொன்னுசாமி, சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின்முறை தலைவர் குருசாமி, செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் செல்லதுரை, கவுரவ தலைவர் ஸ்டாலின் தங்கசாமி. பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் அருணாசலமூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ், ஆலோசகர் வெள்ளசாமி. கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார், பொதுச்செயலாளர் பாலமுருகன்,
அமைப்புகள்-பிரபலங்கள்
தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், மயிலை சந்திரசேகரன், நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் டி.ராஜகுமார், சவுந்தர பாண்டியனார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பாண்டியராஜன், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் பாஸ்கர், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சந்திரமோகன், இந்திய தேசிய நிலத்தரகர் சங்க தலைவர் கண்ணன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்கபெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஞான பிரகாசம். காயல்பட்டினம் மருத்துவமனை அறக்கட்டளையின் உறுப்பினர் ஷேக் சதக் அப்துல்லா, ஷேக் சம்சுதீன்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மண்டல தலைவர் ஜோதி லிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி, பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் குழந்தைவேல், செய்தி தொடர்பாளர் ரமேஷ்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை மாரித்தங்கம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்ட தலைவர் ஏ.பி.துரை, வட சென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட்.
சேப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நல சங்க தலைவர் மாரிமுத்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், சர்வதேச வணிகர்கள் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு.
நடிகர் எஸ்.வி.சேகர், சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், தமிழன்னை கலை மன்ற தலைவர் பி.ரவி, செயலாளர் செல்வக்கண்ணன், ரஜினி மக்கள் மன்ற வட சென்னை மாவட்ட செயலாளர் சந்தானம், சிம்ம பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன்.
காமராஜர் ஆதித்தனார் கழகம் சென்னை மண்டல தலைவர் பால் பாண்டியன், சர்வதேச வணிகர்கள் சம்மேளன தலைவர் கராத்தே வி.சந்துரு, நடிகர் ராணவ், மறுமலர்ச்சி தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத்தலைவர் அஸ்மத்துல்லா, பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் தலைவர் கவிதா காந்தி.
எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆதித்தனார் மக்கள் பேரவை மாநில தலைவர் ஆர்.பி.கணேசன், காந்தி மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், தென்னக ரெயில்வே பயனாளிகள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஆயிரம் விளக்கு அப்துல்லாசா, தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன். அன்னை தெரசா பேரவை மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார். ஐகோர்ட்டு வக்கீல் சோலை பழனிவேல்ராஜன். முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் தமிழ்நாடு அமைப்பு சார்பில் தேசிய துணைத்தலைவர் பாத்திமா அலி, மாநில துணை தலைவர் ஹாஜி அலி, பொதுச்செயலாளர் முகமது புரோஸ்கான்.