திருச்சி மாவட்டத்தில் 1,180 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திருச்சி மாவட்டத்தில் 1,180 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.;

Update:2023-09-18 04:13 IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெரும்பாலும் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் என்பதால் திருச்சி காவிரி பாலத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு, முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் அவல், பொரி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

இதைத்தவிர, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை போலீசாருடன் ஒத்துழைப்பு நல்கி அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் இந்து அமைப்புகளுடன் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் ஆலோசனை நடத்தினார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் காமினி தலைமையிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்