சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 1,100 டன் யூரியா வந்தது

சென்னையில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 1,100 டன் யூரியா வந்தது

Update: 2022-10-08 18:45 GMT

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நடப்பு பருவத்தில் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,100 மெட்ரிக் டன் யூரியா உரம் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் நேற்று வந்து இறங்கியது. இதை வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வேல்விழி மேற்பார்வையில், உதவி இயக்குனர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த உரத்தை லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர நிலையங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்தனர்.

விவசாயிகள் ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைக்குட்பட்டு பயிருக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயன்பெறலாம். மேலும் பயிருக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் பேரூட்டச்சத்து அடங்கிய தழை, மணி, சாம்பல் ஆகிய காம்ப்ளக்ஸ் உரங்களையும் வாங்கி பயன்படுத்தி அதிக மகசூலை பெற்று பயன் பெற வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்