கதண்டுகள் கடித்து சிறுமி உள்பட 11 பேர் காயம்

தோகைமலை அருகே கதண்டுகள் கடித்து சிறுமி உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2022-06-25 18:38 GMT

11 பேர் காயம்

தோகைமலை அருகே உள்ள பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிப்பட்டி பகுதியில் ஒரு தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியில் நேற்று 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தோட்டத்தின் அருகில் ஆற்றுவாரி பகுதி வேலியில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் கலைந்து பறந்து வந்து அங்கிருந்த சின்னரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சின்னம்மாள் (வயது 65), மலர் (47) மற்றும் அவரது பேத்தி கவிநிதா (3), சின்னம்மாள் (50), கண்ணியம்மாள் (65), தனலட்சுமி (44) மற்றும் அவரது பேரன் சர்வேஸ்வரன் (4), தேவிகா (35), கலைச்செல்வி (38), லட்சுமி (35), சுந்தராம்பாள் (45) ஆகிய 11 பேரை கடித்தது. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து அனைவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுபடி தோகைமலை ஒன்றிய ஆணையர் சரவணன், ஊராட்சி மன்றத்தலைவர் சத்யா ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்