108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு முன்னீர்பள்ளத்தில் நாளை நடைபெற உள்ளது.

Update: 2023-01-27 22:44 GMT

109 ஆம்புலன்ஸ் சேவை ஒரு கட்டணமில்லாத மருத்துவம், காவல் மற்றும் தீ உள்ளிட்ட அவசர சேவைகளுக்கு உரிய ஒருங்கிணைந்த எண் ஆகும். தமிழக அரசு சுகாதார திட்டத்தின் கீழ் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம் என்று நெல்லை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் சோமநாதன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்