விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டனர்.;
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி நேற்று மாவட்டம் முழுவதும் மது, குட்கா, கஞ்சா, சூதாட்டம் மற்றும் லாட்டரி சம்பந்தமாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இதில் 63 சாராய வழக்கில் 63 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 96 லிட்டர் சாராயம் மற்றும் 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் 12 குட்கா வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 4 கஞ்சா வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 380 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதவிர 10 சூதாட்ட வழக்குகளில் 26 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டனர்.