108 ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி திருட்டு

புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்சில் ஜி.பி.எஸ். கருவி திருட்டு.

Update: 2023-10-29 20:35 GMT

புளியந்தோப்பு,

சென்னை புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் டிரைவர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுத்துக்கொண்டார். ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) ஆம்புலன்சில் படுத்து தூங்கினார்.

நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஆம்புலன்சில் இணைக்கப்பட்டு இருந்த செல்போன், ஜி.பி.எஸ், கருவி மற்றும் பெண் உதவியாளர் கவுசல்யாவின் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்