108 ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை
கொடைக்கானலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கொடைக்கானல் அருகே வில்பட்டி ஐந்துவீடு பகுதியை சேர்ந்த காமாட்சிநாதன் மகன் அஜித்குமார் (வயது 27). இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்குமார் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தனது பெற்றோரிடம் டிரைவர் வேலை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை வேலைக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அஜித்குமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.