105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிணத்துக்கடவு அருகே 105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-10-07 20:15 GMT
கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10 முத்தூரில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் தலைமையிலான போலீசார், அங்கு மளிகை கடை நடத்தி வரும் வியாபாரி ஹரி ராமகிருஷ்ணன்(வயது 44) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 105 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததோடு ஹரி ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்