பத்திர காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-05-13 19:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ. பி.கே.பழனிச்செல்வம், துணை தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர். சுரேஷ் குமார், கோவில் தர்மகர்த்த எஸ்.எம்.மாரியப்பன், செயலாளர் மாணிக்கம் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்