மாரியம்மன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.;

Update:2022-12-13 00:18 IST

சாத்தூர், 

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு ஓம் சக்தி வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்