100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஸ்கூட்டரில் கடத்திய 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;
கொல்லங்கோடு,
நித்திரவிளை போலீசார் தோட்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் மூடைகளுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை நிறுத்தி விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து ஸ்கூட்டரில் இருந்த மூடைகளை சோதனை செய்தபோது அவற்றில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டருடன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.