100 கிலோ தர்ப்பூசணி பழங்கள் அழிக்கப்பட்டன

தென்காசியில் 100 கிலோ தர்ப்பூசணி பழங்கள் அழிக்கப்பட்டன.;

Update: 2023-05-19 20:46 GMT

தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தை தணிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ஏராளமான தர்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை ஆகின்றன. பொதுமக்கள் இதனை அதிகமானோர் வாங்குவதால் முக்கால் விளைச்சல் இருக்கும் பழங்களை கொண்டு வந்து அவற்றை உடனடியாக பழுக்க வைக்கவும், சிவப்பு நிறம் அதிகமாக ஏற்படவும் கெமிக்கல் ஊசிகள் போடப்படுகின்றன என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தென்காசி வட்டார அலுவலர் நாகசுப்பிரமணியன் அந்த இடத்திற்கு சென்று தர்பூசணி பழங்களை சோதனை செய்து பார்த்தார். அப்போது அவற்றில் கெமிக்கல் ஊசி செலுத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து தென்காசி தபால் நிலையத்தின் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை பிரிக்கும் இடத்தில் இதனை அழிக்கச் செய்தார். சுமார் 100 கிலோ பழங்கள் அழிக்கப்பட்டன. இந்த தர்ப்பூசணி பழங்களை குழந்தைகள் சாப்பிட்டால் வயிற்று நோய்கள் ஏற்படும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்