100 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல்

100 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல்

Update: 2022-09-09 14:20 GMT

துடியலூர்

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் துடியலூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும்போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி, டி.சி.எஸ்.நகர் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்ணுகுமார் (வயது 48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்