வெம்பக்கோட்டை பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள்

100 நாள் வேலைத்திட்ட பணிகள் குறித்து எம்.பி. ஆய்வு செய்தார்.;

Update: 2023-10-03 20:31 GMT

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் தாயில்பட்டி, ரெட்டியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளை மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கையில் பணம் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 90 சதவீத பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டம் விவசாய பணிகளுக்கு ஆதரவானது தான். எதிரானது அல்ல. 100 நாள் வேலை திட்டத்தில் 9 வாரங்கள் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கண்டுகொள்ளாமல் சம்பந்தமில்லாமல் கோவையில் தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறார். தூய்மை பணியை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளனர். காவிரியில் கர்நாடக அரசு தினமும் தண்ணீர் வழங்கி வருகிறது. அதனை மாற்று கட்சியினர் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகஅரசு கிராமசபை கூட்டங்களை சிறப்பாக நடத்தி உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் பணியாளர்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சிஅலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கணேசன், செல்வக்கனி, மாவட்ட செய்திதொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், தாயில்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்தானம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்