பள்ளி மாணவியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை-அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-10-26 17:54 GMT

11-ம் வகுப்பு மாணவி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 31-ந் தேதி ஏரியில் துணி துவைத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக அருகே உள்ள காட்டில் வைத்து கற்பழித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் ஜெயங்கொண்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அந்த மாணவிைய அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

10 ஆண்டுகள் சிறை

இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது‌. இதில் குழந்தையின் மரபணு சோதனை செய்ததில் குற்றவாளி சிலம்பரசன் என்பது உறுதியானது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி சிலம்பரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்‌. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்