கணவருக்கு 10 ஆண்டு சிறை

பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-12-29 19:14 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 31). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகை செல்வி (21). இ்ந்தநிலையில் முருகன் தனது மனைவி கார்த்திகை செல்வியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகை செல்வி 7.7.2015 அன்று வீட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்