10 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து

Update: 2023-08-16 17:54 GMT


திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைவரையும் விலையால் அதிர செய்த தக்காளியின் வரத்து அதிகரித்திருப்பது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இங்குள்ள மொத்த மார்க்கெட்டிற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பெட்டி தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று சுமார் 10 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1200 முதல் ரூ.900 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு பெட்டி ரூ.450 முதல் ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சில கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்