ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட 10 பேர் கைது
ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட 10 பேர் கைது;
கோவை
கோவையில் கோர்ட்டு முன்பு ரவுடி கொலை செய்யப்பட்டது, ஆவாரம்பாளையம் ரோட்டில் ஒரு ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்களை தொடர்ந்து கோவையில் ரவுடிகளை அடக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் இரு கோஷ்டிகளாக சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காமராஜபுரம் கவுதம் உள்ளிட்ட முக்கிய ரவுடிகள் 3 பேரை பிடிக்க பெங்களூருவில் போலீஸ் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.