தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Update: 2023-02-22 21:13 GMT

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் உதவி மேலாளர் நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறியாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், மேற்பார்வையாளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் சோதனை நடத்தினர்.

அதாவது திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் மொத்தம் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயத்தில் எந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. இனிமேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்