வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனா்.;
திண்டிவனம்:
மதுரையில் இருந்து சென்னைக்கு வேன் ஒன்று புறப்பட்டது. திண்டிவனம் அடுத்த மேல்பேட்டையில் வந்தபோது அந்த வேனின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த சென்னை காட்டுப்பாக்கம் பாலசுப்பிரமணியன்(வயது 51), சசிரேகா(50), பிரியங்கா(21), பிரிவினிகா(15), அடையாறு பிரேமலதா(48), மார்பிரேட்(52), மடிப்பாக்கம் மேனகா(60), ஐ.சி.எப். காலனி திருநாவுக்கரசு(52), பெங்களூரு கவுதமி(28), வேன் டிரைவரான கொளத்தூரை சேர்ந்த மணிகண்டன்(30) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.