10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக்கிளி, நீல பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங்காடை, கவுதாரி மற்றும் வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இதுபோன்ற வன உயிரினங்களை வளர்க்க கூடாது என்றும், அவ்வாறு வளர்த்தால் தங்கள் வசம் உள்ள வனஉயிரினங்களை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பச்சைக்கிளிகளை வனத்துறையினர் நன்கு பராமரித்து உரிய உடல்நலத்துடன் உள்ளதை உறுதி செய்து நேற்று காலை வனப்பகுதியில் பறக்கவிட்டனர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள மேற்கண்ட வன உயிரினங்களை தாமாக வந்து அருகில் உள்ள வனச்சரகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வனத்துறையினர் ஆய்வு மேற்கொள்ளும்போது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா எச்சரித்துள்ளார். இதனிடையே மாவட்டத்தில் பல வீடுகளில் கிளிகள், புறாக்கள் போன்றவை வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்