திருப்பூர்
காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய்த்துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் குமரதுரை உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் நேற்று மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவி ஆணையாளர் விமலா, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், கோவில் தாசில்தார் (ஓய்வு) சுப்பிரமணியம் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நிலங்கள் கோவில்வசம் எடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியாகும்.