குவாரி உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை

குவாரி உரிமையாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2023-03-27 19:34 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 46). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் விசாரித்து கனிம வளங்களை அதிகமாக எடுத்த வாசுதேவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு செய்ததாக ரூ.18 லட்சத்து 58 ஆயிரத்து 144-ஐ மாவட்ட கலெக்டரிடம் செலுத்த உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்